ஜா புயலில் கரை ஒதுங்கிய அழகிய கப்பலைப் போல காட்சியளிக்கின்ற சட்டமன்றத்திற்கு எதிரில் உள்ள பூங்கா, ஒருசில வருடம் முன்புவரை டாஸ்மாக் குடிமகன்களின் திறந்தவெளி "பார்' ஆகவும், கஞ்சா மிதப்பாளர்களின் "துறைமுகம்' ஆகவும் இருந்தது. இப்போது கொஞ்சம் ஆரோக்கியமாக, அந்த வாசனைகள் இல்லாமலும் இருக்கிறது.

Advertisment

இந்தப் பூங்காவில் அமர்ந்து, சட்டமன்றத்தை ரசித்தவண்ணம் கச்சேரியைத் தொடங்கினார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

thinaikatchery

காவேரி: நடிகை ராதிகா சரத்குமார் மீது கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் கீழவெண்மணி, மேலவெண்மணி பெண்கள், கீழவேளூர் பெண்கள் புகார் கொடுத்திருக்காங்க.

காமாட்சி: அவுங்களுக்கு நடிகை ராதிகா என்ன கெடுதல் செய்தாகளாம்?

Advertisment

காவேரி: நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் குழுக்கள், தனியார் நுண்கடன் நிறுவனங்கள் மூலம் நிறைய கடன் வாங்கியிருக்காங்க. புயலால வாழ்வை இழந்து தவிக்கிற அவுங்களால வாங்கிய கடனையும் வட்டியையும் உடனே குடுக்க முடியலை. அதனால ஆறுமாசம், ஒரு வருஷத்துக்கு வட்டியையும் கடனையும் வசூலிப்பதை தள்ளிவைக்கணும்னு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்காங்க.

மெரீனா: ஆட்சியர் என்ன சொன்னாராம்?

காவேரி: கடன் வட்டி நடவடிக்கைகளை 6 மாதத்திற்கு தள்ளி வைக்கணும்னு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

மல்லிகை: இதுக்கும் நடிகை ராதிகாவுக்கும் என்னங்க சம்பந்தம்?

காவேரி: நடிகை ராதிகா நடித்த ஒரு விளம்பரப் படம் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பப்படுது. அதுல "நுண்கடன் அமைப்புகள் மூலம் மகளிர் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்துவிட்டதாக சில விஷமிகள் வதந்தி பரப்புகின்றனர். அதை நம்பாம கடன் பெற்றவர்கள், உடனே கடனைத் திருப்பிச் செலுத்தணும்'னு பேசி நடிக்கிறாங்க. நடிகை ராதிகாவின் இந்தப் பேச்சு, கடன் தள்ளுபடிக்காக, ஒத்திவைப்புக்காக போராடிய மகளிரை கேவலப்படுத்துவதாகவும், விஷமிகள் என்று குறிப்பிடுவதாகவும் கலெக்டர் உத்தரவை அவமதிக்கிறதாகவும் இருக்கு. அதனால ராதிகா மீது நடவடிக்கை எடுக்கணும்னு புகார் கொடுத்திருக்காங்க.

Advertisment

காமாட்சி: கட்சியில் ஒன்றியச் செயலாளர் பொறுப்புக்கு பெண்கள் செட்டாகமாட்டாங்க. லாயக்கு இல்லாதவங்க என்று முகத்துக்கு நேரா சொல்லி இன்சல்ட் பண்ணீட்டாராம் ஆளும்கட்சி மா.செ. ஒருத்தரு.

மல்லிகை: யாரந்த ஆணாதிக்கம்?

காமாட்சி: திருவண்ணாமலை தெற்கு மா.செ.யாக இருந்த ராஜன்தான் அமுதா அருணாசலத்திடம் அப்படிச் சொன்னாராம்.

காவேரி: மாநில கூட்டுறவு சங்க தலைவராக இருந்தாங்களே... அதான் இப்ப திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச்செயலாளரா இருக்காங்களே அந்த அமுதா அருணாசலத்தையா?

thinaikatcheryகாமாட்சி: அவுங்களைத்தான். செங்கம் அ.தி.மு.க. ஒ.செ. மதியழகன், ரெண்டு மாதம் முன்னாடி இறந்துவிட்டார். அந்தப் பதவியைப் பிடிக்கிறதுக்கு கடுமையான போட்டி. மா.செ.யாயிருந்த ராஜன்கிட்ட போய், தன்னை ஒ.செ.யாக்குங்கள்னு அமுதா அருணாசலம் கேட்டிருக்காங்க. அதுக்கு அந்த ராஜன், "ஒ.செ.ன்றது சாதாரண பதவியில்லை. ராப்பகலா உழைக்கணும். அதுக்கெல்லாம் உன்னை மாதிரி பெண்கள் செட்டாகமாட்டாங்க'னு ரொம்ப கூலா சொல்லி அனுப்பிச்சிட்டாராம்.

மெரீனா: இப்பதான் ராஜனை நீக்கிவிட்டு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை மாவட்டச் செயலாளர் ஆக்கிட்டாங்களே... அவரைப்போய் பார்க்க வேண்டியதுதானே?

காமாட்சி: பெரிய, உறுதியான சூட்கேஸைத் தூக்கிட்டு அந்த அமைச்சர் மா.செ. பின்னாடிதான் நடந்தோடிக்கொண்டிருக்கிறார் அமுதா.

மல்லிகை: அந்தப் பெரிய உறுதியான சூட்கேஸ்ல எத்தனை "எல்' வைக்கலாம்?

காமாட்சி: 25 லட்சத்தை தாராளமாக அடுக்கலாம். அதை நாம யாரும் தூக்கிட்டு அலைய முடியாது.

கோமுகி: அரசியலில் அமைச்சர்களுக்கே சவால் விடுகிற மகளிரும் இருக்கத்தான் செய்றாங்க. அமைச்சரும் கடலூர் எம்.எல்.ஏ.வுமான எம்.சி.சம்பத்திற்கு, அவருடைய சொந்த ஊரான மேல்குமாரமங்கலத்துக்கே போய் தன்னோட பவரை காட்ட முடிவு செஞ்சிருக்கிறார் பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்தியா பன்னீர்செல்வம். அதிகாரிகள் கெஞ்சியதால் தனது விசிட்டை ரத்து செய்து, தனது பவரை காட்டாமல் விட்டிருக்கிறார் சத்தியா.

காவேரி: கடலூர் மாவட்டத்துல அமைச்சர் சம்பத் கோஷ்டியும், மா.செ. அருண்மொழித்தேவன் கோஷ்டியும் மல்லுக்கட்டுவதும், மா.செ. கோஷ்டியின் முக்கிய தளபதி சத்தியா பன்னீர்செல்வம் என்பதும் தெரியும். இப்ப எதுக்கு பவர் பிரச்சினை?

கோமுகி: அமைச்சர் சம்பத்தின் ஊரான மேல்குமாரமங்கலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 25 கோடியில் பாலம் கட்டுகிறது அரசு. இதற்கான பூமி பூசையை போனமாதமே அமைச்சர் தரப்பு நடத்திவிட்டது. அதற்குப் போட்டியாக எம்.எல்.ஏ. சத்தியா ஆதரவாளர்களும் பூமி பூசைக்கு ஏற்பாடு செய்தார்கள். 3-1-19 அன்று நடைபெறுமென்றும் எம்.எல்.ஏ. வருகிறார் என்றும் பிளக்ஸ்பேனர்கள் வச்சுக் கலக்கினார்கள். எப்படி நடத்துகிறீர்கள் பார்ப்போம் என்று அமைச்சர் தரப்பும் களமிறங்கியது. எம்.எல்.ஏ. வந்தால் நிச்சயம் கலவரம் நடக்கும் என முடிவு செய்த கூடுதல் எஸ்.பி. வேதரத்தினமும் சுந்தரவடிவேலுவும் சத்தியாவிடம் பேசி நடக்கவிருந்த இரண்டாவது பூமி பூசைக்கு எம்.எல்.ஏ. வராமல் தடுத்துவிட்டார்கள்.

மெரீனா: அதிகாரிகள் சமாதானப்பிரியர்கள்

-எஸ்.பி.சேகர், து.ராஜா, க.செல்வகுமார்